முப்பது கிலோ தங்கக் கடத்தலில் எனக்கு சம்பந்தம் இல்லை: ஸ்வப்னா சுரேஷ்

22 views
1 min read
Kerala gold smuggling case, woman accused on the run

முப்பது கிலோ தங்கக் கடத்தலில் எனக்கு சம்பந்தம் இல்லை: ஸ்வப்னா சுரேஷ்

திருவனந்தபுரம்: கேரளத்தில் தங்கக் கடத்தல் சம்பவத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆடியோ மெசேஜ் மூலம் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் 30 கிலோ தங்கக் கடத்தலில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும், ஸ்வப்னா சுரேஷ் முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளார்.

ஸ்வப்னா சுரேஷ் அனுப்பியிருக்கும் வாய்ஸ் மெசேஜ் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அதில், தூதரகத்துக்கு வந்த பெட்டகம் இன்னும் ஏன் அனுப்பப்படவில்லை என்று நான் சுங்கத் துறையை தொடர்பு கொண்டு கேட்டேன். அது மட்டும்தான் நான் செய்தது. ஆனால், அந்த பெட்டகம் எங்கிருந்து வந்தது என்பதோ, அதில் என்ன இருக்கிறது என்பதோ எனக்கு தெரியாது. தற்போது உருவாகியிருக்கும் பிரச்னை காரணமாக ஏற்பட்ட அச்சத்தால்தான் நான் தலைமறைவாக உள்ளேன். நான் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன், ஆனால், இந்த தங்கக் கடத்தல் சம்பவத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மிக வருத்தத்துடன் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்திலுள்ளஅதன் தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பாா்சலில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனா். இந்த விவகாரத்தில் கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் அதிகாரி ஸ்வப்னா சுரேஷுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இவா், கேரள தகவல்தொழில்நுட்பத் துறை செயலாளா் சிவசங்கரால் நியமிக்கப்பட்டவா். சிவசங்கா் கேரள முதல்வா் பினராயி விஜயனின் செயலாளராக கூடுதல் பொறுப்பையும் வகித்து வந்தாா்.

இவா்கள் இருவரும், அரசு பதவிக்குரிய அதிகாரிகளை பயன்படுத்தியும், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு உள்ள சிறப்புரிமையை தவறாகக் கையாண்டும் தங்கம் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து முதல்வரின் செயலாளா் பொறுப்பிலிருந்து சிவசங்கா் நீக்கப்பட்டாா்.

ஞாயிற்றுக்கிழமை 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது முதல் ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகவே உள்ளார். அவருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்வப்னாவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்பு பணியாற்றியவர்.

இந்த குற்றச் சம்பவத்தில் மாநில முதல்வரின் அலுலகத்துக்கு தொடா்பு இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனினும், முதல்வா் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, முன்ஜாமீன் கோரி கேரள நீதிமன்றத்தை ஸ்வப்னா சுரேஷ் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அது நாளை விசாரணைக்கு வர உள்ளது.
 

TAGS
kerala news

Leave a Reply