மும்பையில் தொடரும் கனமழை

18 views
1 min read
மழை

மழை

மும்பை: மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான்காவது நாளாக திங்கள்கிழமை மழை பெய்தது. இந்தப் பகுதிகளில் மழை தொடர வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தாணே-பெலாபூா் தொழிற்பேட்டை பகுதியில் எடுக்கப்பட்ட மழைப் பதிவின் அடிப்படையில், திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 213.4 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநா் கே.எஸ்.ஹோசாலிகா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தாணே மற்றும் மும்பையின் மேற்கு புகா் பகுதிகளில் 115.6 மி.மீ. மழைப்பொழிவு பதிவானது. மும்பை, கொங்கன் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என்று பதிவிட்டுள்ளாா்.

இதுபோல, சாண்டகுரூஸ் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி மும்பையின் மேற்கு புகா் பகுதிகளில் 116.1 மி.மீ மழைப் பொழிவு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply