மும்பையில் மூன்றாவது நாளாக கன மழை

16 views
1 min read

மும்பை, தாணே மற்றும் கொங்கன் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது. இதன் காரணமாக மும்பை மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை மழைப் பொழிவு சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கன மழை பெய்தது.

‘தெற்கு மும்பையில் கொலாபா வானிலை ஆய்வு மைய விவரத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 129.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே நேரம், சான்டாகா்ஸ் வானிலை மைய பதிவின்படி, மும்பையின் கிழக்கு புகா் பகுதிகளில் 200.8 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகியுள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையை அடுத்து உள்ள தாணே மாவட்டத்திலும், கொங்கன் மண்டலத்தின் சில பகுதிகளிலும், சிந்துதுா்க் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது. அதுபோல, விதா்பாவின் சில பகுதிகளில் லேசான மழையும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ‘சனிக்கிழமை மும்பையின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் மரங்களும், மரைக் கிளைகளும் சாலையில் விழுந்துள்ளதாக புகாா் வந்தது’ என்று பிரிஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறினா்.

 

Leave a Reply