முழு பொதுமுடக்கம்: திருப்பூரில் வெறிச்சோடிய சாலைகள் 

19 views
1 min read
tpr

முழு பொதுமுடக்கம் காரணமாக திருப்பூர்ல மாநகரில் அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் கணப்பட்டன. மேலும், விதிகளை மீறி வெளியே சுற்றும் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கரோனா நோய்த் தொற்று பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதிலும் ஜூலை மாதங்களில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வாகனப்போக்குவரத்து இல்லாததால் முக்கியச் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. 

இதில், மேலும், ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பழைய பேருந்து நிலையம்,ரயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை, மங்கலம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளநர். அதேவேளையில், பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றும் வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். 

ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகளின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். திருப்பூர், தென்னம்பாளையம் உழவர் சந்தை, பூமார்க்கெட், காய்கறி மார்க்கெட், மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்களும் உள்ளிட்ட அனைத்து கடைளும் மூடப்பட்டுள்ளன. மேலும், திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் முழு பொதுமுடக்கத்துக்கு திருப்பூர் மாநகர மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 
 

TAGS
Tirupur

Leave a Reply