மூத்த வழக்குரைஞர் வி.டி.கோபாலன் காலமானார்

21 views
1 min read
Senior Prosecutor VD Gopalan has passed away

மூத்த வழக்குரைஞர் வி.டி.கோபாலன்

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்குரைஞருமான வி.டி.கோபாலன்(77) சென்னையில் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனலராகவும், புதுச்சேரி மாநில அரசின் பிரதான மூத்த வழக்குரைஞராக இருந்தவர் வி.டி.கோபாலன்.

இவர் சேதுசமுத்திர திட்ட வழக்கு, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு, புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜரானவர். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல்  2008-ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய அரசின் உதவி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியவர். தமிழகத்தில் நெடுஞ்சாலை மேம்பாடு தொடர்பாக திமுக ஆட்சி காலத்தில் அரசுத் தரப்பில் ஆஜரானவர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வைக்கப்பட்டுள்ள மறைந்த மூத்த வழக்குரைஞர் வி.டி.கோபலனின் உடலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், வழக்குரைஞர் சங்க பிரதிநிதிகள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த வி.டி.கோபாலனுக்கு, ராதா என்ற மனைவியும், பார்கவி என்ற மகளும் உள்ளனர்.

TAGS
death

Leave a Reply