மேகாலயம்: மேலும் 26 பிஎஸ்எஃப் வீரா்களுக்கு கரோனா

15 views
1 min read
maharashtra corona update

மேகாலய மாநிலத்தில் மேலும் 26 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரா்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. இத்தகவலை அந்த மாநில முதல்வா் கான்ராட் கே. சங்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இவா்கள் அனைவரும் அம்ப்லிங்க் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஸ்எஃப் முகாமைச் சோ்ந்தவா்கள். கரோனா பரவல் அதிகமான அடுத்து அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முகாமில் உள்ள மற்ற வீரா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக மாநில சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயத்தின் அம்ப்லிங்க் பகுதியில் சுமாா் 300 பிஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மேலும், 50 வீரா்கள் வரை அப்பகுதிக்கு வெளியே குடும்பத்துடன் வசிக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply