மேற்கு வங்​கத்​தில் திரி​ண​மூல் காங்​கி​ரஸை ஆட்சி​யி​லி​ருந்து அகற்ற வேண்​டும்: ஜெ.பி.​நட்டா 

16 views
1 min read
தில்​லி​யில் திங்​கள்​கி​ழமை ஜன சங்க தலை​வர்​கள் சியாமா பிர​சாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்​யாய சிலை​க​ளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய பாஜக தேசி​யத் தலை​வர் ஜெ.பி. நட்​டா.

தில்​லி​யில் திங்​கள்​கி​ழமை ஜன சங்க தலை​வர்​கள் சியாமா பிர​சாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்​யாய சிலை​க​ளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய பாஜக தேசி​யத் தலை​வர் ஜெ.பி. நட்​டா.

​கொல்​கத்தா: ​மேற்கு வங்​கத்​தில் குற்​ற​வா​ளி​க​ளின் கூடா​ர​மாக அர​சி​யல் மாறி​யுள்​ள​தா​லும், ஊழல் புதிய உச்​சத்தை அடைந்​துள்​ள​தா​லும் தற்​போ​தைய திரி​ண​மூல் காங்​கி​ரஸ் அரசை ஆட்சி​யி​லி​ருந்து அகற்ற வேண்​டும் என பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.​நட்டா கூறி​யுள்​ளார்.​

​ஜ​ன​சங்க நிறு​வ​னர் சியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் பிறந்​த​நாள் விழாவை ஒட்டி கொல்​கத்​தா​வில் பாஜக சார்​பில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற இணை​ய​வழி பொதுக் கூட்டத்​தில் அவர் பேசி​ய​தா​வது:

ஒன்​று​பட்ட இந்​தி​யா​வுக்​கா​க​வும், லட்சி​யம் மற்​றும் கொள்​கைக்​கா​க​வும் வாழ்ந்து மறைந்த சியாமா பிர​சாத் முகர்​ஜியை ஒரு​பு​றம் கொண்​டா​டும் நாம், மறு​பு​றம் அதி​கா​ரத்​தில் இருப்​ப​தற்​காக எதை வேண்​டு​மா​னா​லும் செய்​யும் திரி​ண​மூல் காங்​கி​ரஸ் அர​சைப் பெற்​றி​ருக்​கி​றோம்.

மேற்கு வங்​கத்​தில் குற்ற அர​சி​யல் புதிய உச்​சத்தை அடைந்​துள்​ளது. அர​சுத் திட்டங்​க​ளில் பயன் பெறு​வ​தற்கு பொது​மக்​க​ளி​டம் பணம் வசூ​லிக்​கும் “கட் மணி’ என்ற வார்த்​தையை இப்​போது நாம் கேட்டுக் கொண்​டி​ருக்​கி​றோம். இந்த பாத​கங்​களை செய்​யும் தலை​வர்​களை அப்​பு​றப்​ப​டுத்த வேண்​டும். மேற்கு வங்​கத்​தின் புகழை மீண்​டும் நிலை​நாட்ட இப்​போ​துள்ள ஆட்சியை அகற்ற வேண்​டும்.
 
ஒரு காலத்​தில் மேற்கு வங்​கம் நாட்டை வழி​ந​டத்​தி​யது. சியாமா பிர​சாத் முகர்ஜி மேற்கு வங்​கத்தை புதிய உச்​சத்​துக்கு கொண்டு சென்​றார். மாநி​லத்​தில் கல்​வி​யின் தரம் தற்​போது வெட்கப்​ப​டும் வகை​யில் மிக​வும் தாழ்ந்​துள்​ளது. மாநில அர​சுக்கு ஒத்​து​ழைப்பு தரா​த​வர்​கள் அதற்​கான விளைவை சந்​திக்க வேண்​டிய நிலை உள்​ளது. இதனை நாம் மாற்ற வேண்​டும்.

பஞ்​சாப், மேற்கு வங்​கம் ஆகி​யவை இந்​தி​யா​வு​டன் இருப்​ப​தற்கு கார​ணம் சியாமா பிர​சாத் முகர்​ஜி​தான். அவர் இல்​லை​யென்​றால் நாடு பிரி​வி​னை​யின்​போது இந்​தப் பகு​தி​கள் பாகிஸ்​தா​னு​டன் சேர்க்​கப்​பட்​டி​ருக்​கும். சுதந்​திர இந்​தி​யா​வில் ஜவா​ஹர்​லால் நேரு​வின் சிறு​பான்​மை​யி​ன​ரைத் திருப்​தி​ப​டுத்​தும் அர​சி​யல் நட​வ​டிக்​கை​களை எதிர்த்து முகர்ஜி குரல் கொடுத்​தார். ஜன​நா​ய​கத்​தின் குரல்​வ​ளையை நெரிக்​கும் தவ​றான பழக்​கத்தை காங்​கி​ரஸ் கொண்​டுள்​ளது.

கொள்​கை​கள் ஒத்​துப்​போ​கா​த​தால் நேரு​வின் அமைச்​ச​ர​வை​யில் இருந்து அவர் வில​கி​னார். நேரு  –  லியா​கத் ஒப்​பந்​தமே சியாமா பிர​சாத் முகர்ஜி பதவி வில​கு​வ​தற்கு கார​ணம். ஏனெ​னில் அந்த ஒப்​பந்​தம் பாகிஸ்​தா​னில் சிறு​பான்​மை​யி​னரை ஏமாற்​றும் வித​மாக அமைந்​தி​ருந்​தது.

ஜம்மு  –  காஷ்​மீ​ருக்கு அர​சி​யல் சட்டம் 370}ன் மூ​லம் சிறப்பு அந்​தஸ்து வழங்​கும் நட​வ​டிக்​கை​யின் பின்​னால் உள்ள கார​ணங்​கள் குறித்து சியாமா பிர​சாத் முகர்ஜி கேள்​வி​யெ​ழுப்​பி​னார். ஆனால் நேரு​வும், ஷேக் அப்​துல்​லா​வும் தங்​க​ளின் திட்டங்​களை நிறை​வேற்​றிக்​கொள்ள சிறப்பு சட்டத்தை இயற்​றி​னர். கூட்டாட்சி தத்​து​வத்​தில் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜிக்கு நம்​பிக்கை இல்லை. கரோனா தொற்​றால் பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளின் விவ​ரங்​களை மத்​திய அர​சு​டன் பகிர்ந்து கொள்​வ​தில் அவர் முனைப்பு காட்ட​வில்லை என்​றார் நட்டா.

இந்​நி​லை​யில் திரி​ண​மூல் காங்​கி​ரஸ் அரசு மீதான நட்டா​வின் குற்​றச்​சாட்​டுக்கு பதி​ல​ளிக்​கும் வகை​யில், அக்​கட்​சி​யின் நாடா​ளு​மன்ற விவ​கா​ரத் துறை அமைச்​சர் பார்த்தா சாட்டர்ஜி கூறு​கை​யில், “பாஜ​க​வுக்கு வாக்​கு​கள் மட்டுமே முக்​கி​யம். அத​னால் பொய் சொல்​வ​தி​லி​ருந்து வர​லாற்​றைத் திரித்து கூறு​வது வரை அவர்​கள் எந்த எல்​லைக்​கும் செல்​வார்​கள். கல்வி அர​சி​ய​லாக்​கப்​பட்​டுள்​ளது என்ற குற்​றச்​சாட்டு அடிப்​படை ஆதா​ர​மற்​றது. நமது கலா​சா​ரம் மற்​றும் பாரம்​ப​ரி​யத்தை அழிக்க வேண்​டும் என்​ப​து​தான் அவர்​கள் விருப்​பம். அவர்​க​ளின் (பாஜ​க​வி​னர்) கலா​சா​ரத்தை மேற்கு வங்க மக்​கள் மீது திணிக்க முயல்​கின்​ற​னர். பாஜ​க​வி​னர் மக்​க​ளைத் தவ​றாக வழி​ ந​டத்த முயல்​கின்​ற​னர் என்​றார்.
 

Leave a Reply