மேலூர் அருகே காரில் அடிபட்டு இறந்த 3 கீரிப்பிள்ளைகள்

19 views
1 min read
mg1

மேலூர் அருகே புறவழிச்சாலையில் காரில் அடிபட்டு 3 கீரிப்பிள்ளைகள் உயிரிழந்தன.  

மதுரை மாவட்டம், புறவழிச்சாலையில் தெற்குப்பட்டி பாலம் அருகே மூன்று கீரிப்பிள்ளைகள் நான்கு வழிச்சாலையை இன்று காலை கடக்க முயன்றன. அப்போது மதுரையிலிருந்து திருச்சிக்கு அந்த வழியாக சென்றுகொண்டிருந்த வெண்மை நிற காரில் இரண்டு கீரிப்பிள்ளைகள் அடிபட்டு உயிரிழந்தன.

இதில் தப்பிய மற்றொரு கீரிப்பிள்ளை திரும்பி வந்து இறந்து கிடந்த கீரிப்பிள்ளைகளை பார்த்துள்ளது. அப்போது அடுத்து வந்த வாகனத்தில் அடிபட்டு அதுவும் இறந்து விட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

TAGS
Mongoose கீரிப்பிள்ளை

Leave a Reply