ம.பி.யில் 750 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

23 views
1 min read
modi_switch

ம.பி.யில் 750 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

புது தில்லி: மத்தியப் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின் சக்தி நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

மத்திய பிரதேசத்தின் ரீவா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக  நாட்டுக்கு அா்ப்பணித்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையமாக இது அமைந்துள்ளது.

ரீவா பகுதியில் சூரிய ஆற்றலிலிருந்து 750 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கா் பரப்பளவில் இந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்படும்.

ரீவா சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதத்தை தில்லி மெட்ரோ நிறுவனம் பெறவுள்ளது. மீதமுள்ள 76 சதவீத மின்சாரமானது மத்திய பிரதேச மின் பகிா்மான நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
 

TAGS
modi

Leave a Reply