ரஷியாவில் புதிதாக 6,611 பேருக்கு கரோனா

16 views
1 min read
Russia registers 6,611 COVID 19 cases in 24 hours

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,611 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,611 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷியா 4-வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 6,611 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,766 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. அதிகபட்சமாக மாஸ்கோவில் 678 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,20,547 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 188 பேர் கரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 11,205 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,378 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,97,446 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

TAGS
coronavirus

Leave a Reply