ராசா மிராசுதார் மருத்துவமனையில் தீ விபத்து: ஆட்சியர் ஆய்வு 

21 views
1 min read
fire

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையம் புதிதாகக் கட்டப்பட்டது. இக்கட்டடத்தின் வெளிப்பகுதி மின் கம்பியில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீ பற்றியது. இதிலிருந்து ஏற்பட்ட புகை கட்டடத்துக்குள் பரவியதால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய்மார்கள் அச்சமடைந்து தங்களது சிசுக்களுடன் வெளியேறினர். 

இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் மின் கம்பியில் பற்றிய தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை. என்றாலும் அச்சமடைந்து வெளியே வந்த தாய்மார்கள் மீண்டும் உள்ளே செல்லத் தயங்கினர். இவர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். மருதுதுரை மற்றும் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அனைவரும் உள்ளே சென்றனர். மேலும் அக்கட்டடத்துக்கு ஜெனரேட்டர் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து மின் கம்பி சீரமைக்கும் பணி திங்கள்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் இம்மருத்துவமனைக்கு திங்கள்கிழமை காலை சென்று ஆய்வு செய்தார்.

TAGS
Fire government hospital

Leave a Reply