ராசிபுரம் அருகே விடுதலை களம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

22 views
1 min read
nmk

திருமலை நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று தவறாக சித்தரிக்கும் இணையதளங்களை முறைப்படுத்த வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தொட்டிப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை களம் அமைப்பின் சார்பில் சமூக இடைவெளியுடன் விடுதலை களம் அமைப்பின் நிறுவனர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை களம் அமைப்பைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

திருமலை நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று தவறாக சித்தரிக்கும் கருத்துக்களுக்கு எதிராக கோஷமெழுப்பினர். மேலும் இது போன்ற சாதிய மோதல்களை உருவாக்க முனைபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவதுடன் இணைதளங்களை மத்திய, மாநில அரசுகள் முறைப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தியும் கோஷமெழுப்பினர்.

TAGS
Rasipuram ஆர்ப்பாட்டம்

Leave a Reply