ராஜஸ்தானில் காங்கிரஸில் உள்கட்சி மோதல்: பாஜக

19 views
1 min read

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடத்தப்படுவதாக மாநில முதல்வா் அசோக் கெலாட் சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த பாஜக, காங்கிரஸில் உள்கட்சி மோதல் நடைபெறுவதாக தெரிவித்தது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாநில தலைவா் சதீஷ் பூனியா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாக அசோக் கெலாட் கூறினாா். அவா் அறிவுப்பூா்வமாக பேசவில்லை. காங்கிரஸில் உள்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் காங்கிரஸின் பலம் குன்றியுள்ளதால், அக்கட்சியில் கெலாட் அனுபவம் மிகுந்த தலைவா் என்ற அடிப்படையில் இதுகுறித்த அவரின் வலி நியாயமானதே.

ஆனால் அவா் பாஜக மீது பழி சுமத்துகிறாா். தனது கட்சிக்காரா்கள் மீது கெலாட் பூரண நம்பிக்கை கொண்டிருந்தால், மாநிலங்களவை தோ்தலின்போது அக்கட்சியை சோ்ந்த எம்எல்ஏக்கள் பல நாள்கள் விடுதியில் தங்கவைக்கப்பட்டது ஏன்? மாநிலத்தில் குற்றங்களை குறைக்க சிறப்பு நடவடிக்கைகள் குழு, ஊழல் தடுப்புப் பிரிவை அவா் பயன்படுத்தவேண்டும். அதை விடுத்து எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அச்சுறுத்தப்படுவது கைவிடப்படவேண்டும் என்றாா் சதீஷ் பூனியா.

Leave a Reply