ராஜஸ்தானில் கூவத்தூர் ஃபார்முலா

19 views
1 min read
PILOT-GEHLOT-PTI

கோப்புப்படம்

பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கருதப்படும் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 12 பேர் குருகிராம் மாவட்டத்திலுள்ள ஐடிசி கிராண்ட் பாரத் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக குதிரைப் பேரம் நடத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 12 பேர் குருகிராமில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹரியாணாவிலுள்ள பாஜக வட்டாரங்கள் இதுபற்றி தெரிவிக்கையில், குருகிராமில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்கள் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் என்றனர். 

சுமார் 40 பாஜக எம்எல்ஏ-க்களும் அதே விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கட்சித் தலைமை கருதுவதால் அவர்களும் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மாலை முக்கியமான பாஜக தலைவர்களால் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

அந்த விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களை சச்சின் பைலட் சனிக்கிழமை மாலை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகங்களை நெருங்கவிடாமல் இருப்பதற்காக விடுதி நிர்வாகம் பிரதான நுழைவாயிலிலிருந்து 500 மீட்டர் தொலைவு வரை தடுப்புகளை வைத்துள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி பெரும்பான்மையை இழந்தபோதும் எம்எல்ஏ-க்கள் சிலர் இங்கு தங்கவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS
rajasthan

Leave a Reply