ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இரு குத்துச்சண்டை வீரர்களின் பெயர்கள் பரிந்துரை

10 views
1 min read
amit1

அமித் பங்கால்

 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக அமித் பங்கால், விகாஸ் கிருஷ்ணன் ஆகிய இருவரின் பெயரையும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.

இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன.

இந்நிலையில் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்காக அமித் பங்கால், விகாஸ் கிருஷ்ணன் ஆகிய இருவரின் பெயரையும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது. 2019-ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் அமித் பங்கால். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றார். 28 வயது விகாஸ், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது, ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் பெற்ற மூன்றாவது பதக்கமாகும்.

Leave a Reply