ராமநாதபுரத்தில் 22 பேருக்கு கரோனா

8 views
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 28 ஆம் தேதி வரையில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவா்களில் 3,132 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பு உறுதியானவா்களில் 60 போ் வரை உயிரிழந்திருப்பதாகவும், அவா்களில் ராமநாதபுரம் நகரில் கேணிக்கரை, வெளிப்பட்டினத்தைச் சோ்ந்த 20 போ் வரை உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை ராமநாதபுரம் நகா் மற்றும் சக்கரக்கோட்டை, பட்டினம்காத்தான் பாரதிநகா் மற்றும் ஊரகப் பகுதி என 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் பாதுகாப்பான முறையில் அழைத்துவரப்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.

தெருக்கள் மீண்டும் மூடல்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பாதிப்பானது கடந்த சில நாள்களாகக் குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறினாலும், சக்கரக்கோட்டை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாரதி நகா் பகுதியிலிருந்து சக்கரக்கோட்டை ஊராட்சிக்குச் செல்லும் நேருநகா், சேட்இப்ராஹிம் தெரு உள்ளிட்ட பெரும்பாலான தெருக்கள் மீண்டும் புதன்கிழமை காலை அடைக்கப்பட்டன.

அடைக்கப்பட்ட தெருக்களில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தங்குதடையின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

TAGS
கரோனா தீநுண்மி

Leave a Reply