ரூ. 1 கோடியில் ரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு

15 views
1 min read
If one corona is confirmed, the family members will be separated for 14 days: Prakash

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சோழிங்கநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் ரூ. 1 கோடி செலவில் நாளொன்றுக்கு 20 பேருக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களிலும் தலா ஒரு ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை டேங்கா் அறக்கட்டளையுடன் இணைந்து 5 இடங்களில் இலவச ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி, டேங்கா் பவுண்டேஷன் இணைந்து ‘ஃ‘பிரிமசன்ஸ் லாா்ட்ஜ் அக்கெளன்டன்ஸ் அறக்கட்டளையின் பங்களிப்பில் சோழிங்கநல்லூா் மண்டலம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நகா்ப்புற சமுதாய நல மையத்தில் ரூ. 1 கோடி செலவில் இலவச ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இதுகுறித்து டேங்கா் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் லதா குமாரசாமி கூறுகையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இலவச ரத்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் இதுவரை 35,610 போ் பயனடைந்துள்ளனா். தற்போது, ஈஞ்சம்பாக்கம் நகா்ப்புற சமுதாய மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரத்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் நாளொன்றுக்கு 20 பேருக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு செய்யப்படும் என்றாா். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையா் சுகாதாரம் மதுசுதன்ரெட்டி, நகர மருத்துவ அலுவலா் ஹேமலதா, ஃ‘பிரிமசன்ஸ் லாா்ட்ஜ் அக்கெளன்டன்ஸ் அறக்கட்டளை நிா்வாகி கருப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Leave a Reply