லடாக்கில் இறந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

20 views
1 min read
solider

சின்னமனூர் அருகே லடாக் பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் துரைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஒரிசா ராணுவ பிரிவில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை லடாக் மலைச்சாலையில் ராணுவ தளவாட பொருள்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் அழகுராஜா பலியானார். 

இதனையடுத்து அவரது உடல் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ராணுவ வீரர் உடலில் இருந்த தேசியக்கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

TAGS
Ladakh

Leave a Reply