வங்கி ஊழியருக்கு கரோனா: மேட்டுப்பாளையம் ஸ்டேட் வங்கி மூடல்

18 views
1 min read
SBI

மேட்டுப்பாளையம் மூடப்பட்ட ஸ்டேட் வங்கி

 

மேட்டுப்பாளையம் ஸ்டேட் வங்கியில் ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் உருளைக்கிழங்கு மண்டி உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தமிழர்கள் பெரும்பாலும் 50 சதவீதம் பேர் மேட்டுப்பாளையம் நகர பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க்  வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.  இதனால் வங்கியில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். 

இந்நிலையில் வங்கியில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கி நிர்வாகம் சார்பில் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் வங்கி தற்காலிகமாக மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

இதனால் வங்கிக்கு இதுவரை வந்து சென்ற வாடிக்கையாளர்கள்  தங்களுக்கும் கரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TAGS
Corona

Leave a Reply