வருகிற 13 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள்: அமைச்சர் தகவல்

15 views
1 min read

தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் அரசுப் பள்ளிகள் கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

‘தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற 13-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். அதேபோன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் பழைய நடைமுறையே தொடரும்’ என்று தெரிவித்தார்

Leave a Reply