வாராணசி தொகுதி மக்களுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடல்

19 views
1 min read
PM Modi to interact with people of Varanasi on Thursday

வாராணசி தொகுதி மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார். (கோப்புப்படம்)

வாராணசி தொகுதி மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“கரோனா தொற்று காலத்தில் வாராணசி மக்கள் சமூக அமைப்புகளுடன் இணைந்து முழு அர்ப்பணிப்புடன் உதவி தேவைப்படுவோருக்கு உதவியது மட்டுமில்லாமல் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். நாளை காலை 11 மணிக்கு எனது தொகுதியைச் சேர்ந்த இந்த மக்களுடன் பேசுவதை எதிர்நோக்கியுள்ளேன்.”

முன்னதாக பிரதமர் மோடி கடந்த மாதம் வாராணசி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார். மேலும் கரோனா தொற்றுக்கு எதிரான போரில் உள்ளாட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

TAGS
pm modi

Leave a Reply