வாழப்பாடி பகுதியில் நான்கு பேருக்கு கரோனா தொற்று

21 views
1 min read

corona victims

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இப்பகுதியில் கிருமிநாசினி தெளித்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணிக்கப்படுகிறது. இவர்களோடு தொடர்புடையவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரூராட்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும், வாழப்பாடி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கும், சேலம் மாநகர காவல் ஆணையர் குடியிருப்பில் பணிபுரிந்து வரும் வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிக்குட்டை கிராமத்தை சேர்ந்த 36 வயது பெண் ஒருவருக்கும், சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்ருட்டி காவலராக பணிபுரிந்து வரும், மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவருக்கும் வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த 41 வயது ஊழியர் மற்றும் இவரது மனைவி, இரு மகள்களுக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும், சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 25 பேருக்கும் சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் பேளூர் மற்றும் காரிப்பட்டி வட்டார சுகாதாரத்துறையினர் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று பாதித்தோர் வசித்து வரும் பகுதி மற்றும் பணிபுரியும் இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தி, கட்டப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள சுகாதாரத்துறையினர், இப்பகுதியில் யாருக்கேனும் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதாவென களஆய்வு செய்து வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் கடந்த இரு தினங்களாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால், இப்பகுதி மக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமெனவும், அத்தியாவசியமின்றி வீட்டை விட்டுவெளியே வரவேண்டாமெனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 

TAGS
Coronavirus

Leave a Reply