விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா, சரணடைந்தாரா? அகிலேஷ் யாதவ் கேள்வி

17 views
1 min read
Did Vikas Dubey surrender or was he arrested?: Akhilesh Yadav raises questions

​கான்பூர் என்கவுன்ட்டர் வழக்கின் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபை கைது செய்யப்பட்டாரா அல்லது சரணடைந்தாரா என அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார். (கோப்புப்படம்)

கான்பூர் என்கவுன்ட்டர் வழக்கின் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா அல்லது சரணடைந்தாரா என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் ரௌடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 காவலர்கள் உயிரிழந்தனர். இதன்பிறகு, தலைமறைவான வழக்கின் முக்கியக் குற்றவாளியான விகாஸ் துபேவை மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வைத்து காவல் துறையினர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா அல்லது சரணடைந்தாரா என்று அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

“கான்பூர் வழக்கின் முக்கியக் குற்றவாளி தற்போது காவல் துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பதாக கேள்விபட்டோம். இந்தத் தகவல் உண்மையென்றால், அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது சரணடைந்தாரா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதேசமயம், அவரது அலைபேசி பதிவுகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இதன்மூலம், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் வெளிப்படுவார்கள்.” 

TAGS
Vikas Dube

Leave a Reply