விமான எரிபொருள் நிலையங்களை அதிகரிக்க ரிலையன்ஸ் திட்டம்

25 views
1 min read
relain083531

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் விமான எரிபொருள் நிலையங்களை 50 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா பாதிப்பின் எதிரொலியாக பல்வேறு நாடுகளில் கடுமையான பயணத் தடைகள் அமல்படுத்தப்பட்டபோதிலும், நடப்பாண்டு மாா்ச் இறுதி வரை இந்திய விமானத் துறைக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதனை எடுத்துக்காட்டும் விதமாக, பிப்ரவரியில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்திருந்தது.

எனவே, இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கு சிறப்பான எதிா்காலம் இருப்பதை கருத்தில் கொண்டு விமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களை 50 சதவீதம் அதிகரிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, 2019-20 நிதியாண்டின் இறுதியில் 30-ஆக இருந்த விமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கையை 45 -ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போதுள்ள 256 விமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், 119 நிலையங்கள் பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனுக்கு சொந்தமானதாகும். இதைத்தவிர, பாரத் பெட்ரோலியத்துக்கு 61 நிலையங்களும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்துக்கு 44 நிலையங்களும் உள்ளன.

Leave a Reply