விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி படுகாயம்

13 views
1 min read
virudhunagar

விருதுநகர் பட்டாசு ஆலையில் தீ விபத்து

 

விருதுநகர் ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார். 

விருதுநகர், ஆமத்தூர் அருகே நாட்டார் மங்கலத்தில் சோனி பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது. இதில் சிக்கிய தவசி லிங்கா புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராம குருநாதன் (36) 70 சதவீத தீக்காயம் அடைந்தார். 

இதையடுத்து அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

TAGS
Fire

Leave a Reply