விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பலி

16 views
1 min read
dead

 

விருதுநகர்: விருதுநகர் அருகே நல்லமநாயக்கன்பட்டி மின்சாரம் தாக்கியதில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், அதிமுக 12வது வார்டு ஒன்றியக் கவுன்சிலருமான முருகேசன் சம்பவ இடத்தில் இன்று (திங்கள்கிழமை) உயிரிழந்தார்.

விருதுநகர் அய்யனார் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (52). இவர் கடந்த 2001 முதல் 2006 வரை விருதுநகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆக பணிபுரிந்தார். மேலும் தற்போது விருதுநகர் 12வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான தொழிற்சாலையில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் தொழிலாளர் உடன் அதை சரி செய்யும் பணியில் முருகேசன் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் முருகேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TAGS
விசாரணை மின்சாரம்

Leave a Reply