விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள் விழா

18 views
1 min read
tamil_kalaingar

பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள் விழா

 

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் 150வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ் மொழியை செம்மொழியாக முதல் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். தமிழ் மேல் கொண்ட பற்றால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார். இவரது தமிழைப் போற்றும் வகையில் தமிழக அரசு விளாச்சேரியில் வாழ்ந்த இடத்தில் நினைவு இல்லம் அமைத்து வெங்கல சிலை நிறுவியது. பரிதிமாற்கலைஞரின் 150-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் பரிதிமாற் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் பா. சரவணன் தலைமையில் பரிதிமாற்கலைஞர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன் துணைத் தலைவர் இந்திரா ஜெயக்குமார் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

TAGS
பரிதிமாற்கலைஞர்

Leave a Reply