விழுப்புரத்தில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

17 views
1 min read
protest

விழுப்புரம் மாவட்டத்தில் சுருக்குமடி வலைக்கு அரசு தடை விதிப்பதைக் கண்டித்து மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மீன் வளத்தைப் பாதுகாப்பதற்காக சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

இதனால் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள், இந்த சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்திப் பிடிக்கும் மீன்கள் மற்றும் வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இதனால் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு அனுமதி வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், சனிக்கிழமை மரக்காணம் அருகே கூனிமேடு பேருந்து நிறுத்தம் அருகே கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு, சுருக்குமடி வலைகளை அரசு தடை செய்யக்கூடாது.இதனைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும், சுருக்கு  வலைகளைத் தடை செய்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் தமிழகத்தில் சுருக்குமடி வலையை அனுமதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில்ய வலியுறுத்தினர்.

TAGS
protest

Leave a Reply