விழுப்புரம் கிளைச் சிறையில் கைதிக்கு கரோனா

28 views
1 min read
subjail

விழுப்புரம் கிளைச் சிறையில் கைதி ஒவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருந்தது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள தொடர்ந்தனூர் கிராமத்தில் மணல் திருட்டு வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் விழுப்புரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருந்தது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் கிளைச் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு காவல்துறை மற்றும் சுகாதார துறையினரிடம் சிறைத் துறையினர் அனுமதி கோரி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிளைச் சிறை வளாகம் முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

TAGS
coronavirus

Leave a Reply