விவசாயக் கிணற்றில் பிளீச்சிங் கழிவைக் கலந்த சலவை ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

4 views
1 min read
well

திருப்பூர்: திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே விவசாய கிணற்றில் பிளீச்சிங் கழிவை கலந்த சலவை ஆலையின் மின் இணைப்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனர்.

திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட அகரஹாரப்புத்தூரில் தனியாருக்குச் சொந்தமான சலவை ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் அருகில் உள்ள தோட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கான கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் சலவை ஆலையில் இருந்து பிளீச்சிங் கழிவு நீரை கிணற்றில் கலந்ததாகத் தெரிகிறது. இதனால் கிணற்றில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியதை அப்பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர். 

இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கிணற்றில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தியுள்ளனர். இதில், அதிக அளவு பிளீச்சிங் கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து, கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றுமாறு சலவை ஆலை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், சலவை ஆலையின், மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனர். இதைத்தொடர்ந்த, சலவை ஆலை தொடர்ந்து செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

TAGS
washing waste

Leave a Reply