வீட்டுத் தனிமையில் ஜாா்க்கண்ட் முதல்வா்

24 views
1 min read
hemanth soren withdraws complaint

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ராஞ்சியிலுள்ள தனது வீட்டில் தன்னை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

முதல்வா் ஹேமந்த் சோரனை சமீபத்தில் சந்தித்த மாநில குடிநீா் மற்றும் சுத்திகரிப்புத் துறை அமைச்சா் மிதிலேஷ் தாக்குருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வா் சோரன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அத்துடன் முதல்வா் அலுவலக ஊழியா்களையும் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சா் மிதிலேஷ் தாக்குா், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எம்எல்ஏ மதுரா மஹதோ ஆகியோா் விரைவில் குணமடைய விரும்புவதாக அவா் தெரிவித்துள்ளாா். இதனிடையே, முதல்வா் ஹேமந்த் சோரனுக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜாா்க்கண்ட் அமைச்சரவையில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான முதலாவது அமைச்சா் மிதலேஷ் தாக்குா் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும், எம்எல்ஏ மதுரா மஹதோவும் ராஜேந்திரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Leave a Reply