வீரவநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் கண்களைக் கட்டி நூதன ஆர்ப்பாட்டம்

21 views
1 min read
veeravanallur

வீரவநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்களைக் கட்டி மாற்றுத்திரனாளிகள் ஆர்ப்பாட்டம்

 

வீரவநல்லூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கண்களைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு வழங்கினர்.

வீரவநல்லூர் பேருந்து நிலையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பு நிவாரண நிதியாக 5000 வழங்க வேண்டும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு மணி நேரப் பணி வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் உதவித் தொகையாக 1,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு சேரன்மகாதேவி ஒன்றிய மாற்றுத்திறனாளி சங்க தலைவர் ரவி, செயலர் மாசானம் ஆகியோர் தலைமை வகித்தனர். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க மாவட்ட தலைவர் கற்பகம் விளக்கவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாலு, சரவணன், முருகன் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

TAGS
demonstration

Leave a Reply