வெள்ளக்கோவிலில் சத்து மாத்திரைகள் வழங்கிய பாஜகவினர் 

14 views
1 min read
நகராட்சி ஆணையர் டி.சசிகலாவிடம் சத்து மாத்திரைகளை வழங்குகிறார் பாஜக குணமூர்த்தி.

நகராட்சி ஆணையர் டி.சசிகலாவிடம் சத்து மாத்திரைகளை வழங்குகிறார் பாஜக குணமூர்த்தி.

வெள்ளக்கோவில்: தற்போது பல்வேறு பகுதிகளிலும் கரோனா அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த உதவும் வகையில் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த 3,000 குடும்பத்தினர் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை வழங்க பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டனர்.

முதல் கட்டமாக வெள்ளக்கோவில் நகராட்சிப் பணியாளர்களுக்காக சத்து மாத்திரைகளை நகராட்சி ஆணையர் டி.சசிகலாவிடம் கட்சியின் நகர தலைவர் குணமூர்த்தி வழங்கினார். பொது மக்களுக்கு வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. 

Leave a Reply