வெள்ளக்கோவிலில் திமுக இளைஞரணி சார்பில் மனுத் தாக்கல்

20 views
1 min read
dmk

விண்ணப்பத்தைப் பெறும் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன்.

 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் திமுக இளைஞரணி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் பகுதியில் நிர்வாக வசதிக்காக திமுக ஒன்றியம், நகரம் எனச் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், நகர இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வெள்ளக்கோவில் கலைஞர் அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரிடம் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் மனுத்தாக்கல் செய்தனர். யார் தேர்வு செய்யப்பட்டார் என்பதை பின்னர் கட்சித் தலைமை முறைப்படி அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

TAGS
petition

Leave a Reply