வெள்ளக்கோவிலில் லாரி கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஓட்டுநர்

19 views
1 min read
வெள்ளக்கோவில் அருகே தலைகுப்புற கவிழ்ந்த லாரி.

வெள்ளக்கோவில் அருகே தலைகுப்புற கவிழ்ந்த லாரி.

கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து சோடா உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கரூர் சென்று கொண்டிருந்த லாரி வெள்ளக்கோவில் அருகே பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து சோடா உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கரூர் சென்று கொண்டிருந்தது. லாரியின் உரிமையாளர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த ஓட்டுநர் லாரியை ஓட்டி வந்தார்.

லாரி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. வெள்ளக்கோவில் குட்டக்காடு பிரிவு பக்கத்தில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பாலம் வேலை நடைபெற்று வருவதால் சாலையில் வேகத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

வேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு குழியில் விழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வெள்ளக்கோவில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply