வெள்ளக்கோவில் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் காயம்

17 views
1 min read
கரூா் சாலை வைரமடை அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன கார்கள்.

கரூா் சாலை வைரமடை அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன கார்கள்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்தனர். 

வெள்ளக்கோவில் வழியாக செல்லும் கோவை – கரூர் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து அதிகம் காணப்படும் சாலை ஆகும். தற்போதைய கரோனா சமயத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலையில் குறைவான வாகனங்களே சென்று வருகின்றன. சாலை நன்றாக இருப்பதால் கார்கள் போட்டி போட்டு வேகமாகச் செல்கின்றன.

இந்த நிலையில் கரூா் சாலை வைரமடை அருகே வேகமாகச் சென்ற இரண்டு கார்கள் வியாழக்கிழமை அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ஓட்டுநர்கள் இருவரும் உயிர் தப்பினர். கார்களில் வந்த இரண்டு ஆண்கள் காயமடைந்தனர். 

விபத்து குறித்து காவலர்கள் வழக்க பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Leave a Reply