வேலூரில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவர்கள் கைது

19 views
1 min read
atm1

வேலூரில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சிட்டி யூனியன் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ஒருவர் பணம் எடுத்து பையில் வைக்க முயன்றார். அப்போது அப்பகுதியில் இரவு நேர ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக ஏடிஎம் உள்ளே பணம் கொள்ளையடித்து கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக அவனை மடிக்கி பிடித்தனர். 

பிறகு வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் இச்சம்பவத்தில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இத்திருட்டு முயற்சியில் ஈடுபட்ட விசாரித்த காகிதபட்டறையைச் சேர்ந்த ஹரி (17), தினேஷ் குமார் (23), ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்தனர்.
 

TAGS
ATM vellore

Leave a Reply