ஸ்ரீசாந்தின் இந்திய XI: டி20 கேப்டனாக கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா தேர்வு!

19 views
1 min read
sreesanth1

 

ஸ்ரீசாந்தின் இந்திய அணித் தேர்வில் டி20 கேப்டனாக கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி ஸ்ரீசாந்த் கூறியதாவது: அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே அணியைத் தான் தேர்வு செய்யவேண்டும் என நான் விரும்புகிறேன். சுரேஷ் ரெய்னாவுக்கு மேலும் பாராட்டுகள் கிடைக்கப்பட வேண்டும். கோலி மீது மிகுந்த மரியாதை உண்டு. எனினும் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்கிறேன். மற்ற வகை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு கோலியே கேப்டனாக இருக்கலாம் என்றார்.

ஸ்ரீசாந்த்தின் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாகத் தன்னையும் பும்ராவையும் தேர்வு செய்துள்ளார்.

ஸ்ரீசாந்தின் இந்திய XI: ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, கே.எல். ராகுல், தோனி, பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, ஸ்ரீசாந்த்.

TAGS
Sreesanth

Leave a Reply