ஸ்ரீபெரும்புதூர் அருகே அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு

20 views
1 min read
youth

அழுகிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூரில் காணாமல் போன வாலிபர் போந்தூர் பகுதியில்  அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கட்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜான்ரோஸ் (23), இவர் கடந்த மாதம் 26ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(25),  என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்துர் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போந்துர் செல்வதாக தனது வீட்டில் கூறி சென்ற ஜான்ரோஸ் வீடு திருப்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஜான்ரோஸ் காணவில்லை எனப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து ஜான்ரோசை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்துர் பகுதியில் உள்ள  தனியார் சொகுசு விடுதி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்குத் தகவல்  கிடைத்துள்ளது. தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர்  ஆய்வாளர் விநாயகம் மற்றும் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  

விசாரணையில் போந்தூர் பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நபர் கட்சிபட்டு பகுதியைச் சேர்ந்த ஜான்ரோஸ் என்பது தெரிய வந்தது. ஜான்ரோஸ் கொலை செய்த கொலையாளிகள் சடலத்தை முட்புதரில் வீசி சென்று இருக்கலாம் எனவும், ஜான்ரோûஸ அழைத்துச் சென்ற கார்த்திக்கிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர்ôர் தெரிவித்தனர்.    

TAGS
ஸ்ரீபெரும்புதூர்

Leave a Reply