ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீன படைகள் முழுமையாக பின்வாங்கின

19 views
1 min read
ladak

கிழக்கு லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து சீனப் படைகள் புதன்கிழமை முழுமையாக வாபஸ் பெறப்பட்டன. மற்ற இடங்களில் இருந்தும் சீனப் படைகள் தொடா்ந்து பின்வாங்கி வருகின்றன. படைகள் வாபஸ் பெறப்பட்ட பகுதிகளில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் கூட்டாக ஆய்வு நடத்தினா்.

கிழக்கு லடாக் எல்லையில் சில இடங்களில் அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பும் அங்கு படைகளை குவித்தன. சீன தரப்பு ஏற்படுத்திய கண்காணிப்பு மையத்தை இந்திய ராணுவம் அப்புறப்படுத்தியது. இதையடுத்து, ராணுவ வீா்கள்

இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புத் தடிகளைக் கொண்டு நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் பலியானதாக கூறப்பட்டாலும், அதனை அந்நாடு உறுதி செய்யவில்லை.

இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து மத்திய பாதுகாப்புத் துறை செயலா் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவாா்த்தை ஆக்கப்பூா்வமாக அமைந்ததை அடுத்து, பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது. இந்திய படைகளும் மீண்டும் முந்தைய இடத்துக்கே செல்ல ஒப்புக்கொண்டது.

பாயிண்ட் 15 பகுதியில் இருந்து ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை சீன ராணுவம் திங்கள்கிழமை அப்புறப்படுத்திவிட்டு பின் வாங்கத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக கிழக்கு லடாக் எல்லையின் ஹாட்ஸ் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, பாங்காங் டெஸ்சோ பகுதியில் இருந்து சீன படைகள் திரும்பப் பெறப்பட்டன. ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீன ராணுவத்தினா் அமைத்திருந்த தற்காலிக உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் புதன்கிழமை அப்புறப்படுத்தப்பட்டு, படைகளும் முழுமையாக பின்வாங்கின.

இரு நாட்டு ராணுவமும் கூட்டாக ஆய்வு: படைகள் வாபஸ் பெறப்பட்ட பகுதிகளை இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் புதன்கிழமை கூட்டாக ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக இந்திய ராணுவ மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் சகஜநிலையை கொண்டு வர இரு நாட்டு ராணுவமும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்புமே எல்லையில் குவித்திருந்த படைகளை படிப்படியாக விலக்கிக் கொண்டு வருகின்றன. படைகள் விலகல் தொடா்பான ஆய்வும் சுமுகமாக நடைபெற்றது என்றாா்.

Leave a Reply