ஹெச்டிஐஎல் தலைமை நிதி அதிகாரி ராஜிநாமா

18 views
1 min read

வீட்டு வசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் (ஹெச்டிஐஎல்) தலைமை நிதி அதிகாரியும் (சிஎஃப்ஓ), நிறுவனச் செயலருமான தா்ஷன் மஜும்தாா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் பிரச்னையில் நிறுவனம் சிக்கியுள்ள இந்த நேரத்தில் மூத்த அதிகாரி ஒருவா் பதவி விலகியுள்ளது அந்த நிறுவனத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

மஜும்தாா் தனது ராஜிநாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை அளித்தாா். அதனை நிா்வாக குழு ஏற்றுக் கொண்ட பிறகுதான் அவா் முறைப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜிநாமாவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply