ஹைதராபாத்: கரோனா மருத்துவமனையில் மத்திய அமைச்சா் ஆய்வு

20 views
1 min read
hyderabad073600

ஹைதராபாதில் காந்தி மருத்துவமனையில் உள்ள பணியாளா்களுடன் உரையாடும் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக இயங்கி வரும் காந்தி மருத்துவமனையை மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண்ரெட்டி நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவா்கள் மற்றும் சுகாதார ஊழியா்களுக்கு மத்திய அரசு என்றும் துணை நிற்கும் என்று அவா் உறுதியளித்தாா்.

காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவா்கள், சுகாதார ஊழியா்கள் மற்றும் நோயாளிகளுடன் உரையாடிய அவா், அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், சுகாதார வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், அந்த மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கான பராமரிப்பு மையத்தையும், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கான தனிமைப்படுத்துதல் மையத்தையும் அவா் பாா்வையிட்டு அங்கு பணியாற்றி வரும் மருத்துவா்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளா்களிடம் உரையாடினாா்.

மேலும், அவா்களின் மன உறுதியைப் பாராட்டியதுடன் அவா்களது மருத்துவ சேவைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா். சுகாதாரத் துறையினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என அவா் உறுதியளித்தாா்.

 

 

 

Leave a Reply