ஹைவேவிஸ் மேகமலை தேயிலைத் தோட்டத்தில் யானைகள் நடமாட்டம்; மக்கள் அச்சம்

12 views
1 min read
WhatsApp_Image_2020-07-08_at_5

ஹைவேவிஸ் மேகமலை தேயிலைத் தோட்டத்தில் யானைகள் நடமாட்டம்; மக்கள் அச்சம்

 உத்தமபாளையம் : தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மேகமலை தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மாலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு  ஏழு மலை கிராமங்களில் 800 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை விளைவிக்கப்படுகிறது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிப்பிடமாக உள்ளன.
இந்நிலையில் புதன்கிழமை அடர்ந்த வனப்பகுதியில் இருந்த மூன்று யானைகள் தேயிலைத் தோட்டங்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இதனை கண்ட அப்பகுதி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யானைகள் கூட்டமாக உலாவுவதை கண்டு அச்சத்தில் மூழ்கியுள்ளனர். 

இதனையடுத்தே சின்னமனூர் வனத்துறையினர் குடியிருப்பு அருகே சுற்றிவரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

TAGS
tamilnadu news

Leave a Reply