11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் திமுக மனு: அவைத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

17 views
1 min read
reasonable rates have to be fixed for COVID tests: Supreme Court

புது தில்லி: ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவைத் தலைவர் விளக்கம் அளிக்குமாறு திமுக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் அவைத் தலைவர் பதிலளக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அவைத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக சட்டப் பேரவை திமுக கொறடா ஆா். சக்கரபாணி சாா்பில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறாா். ஆகவே, இது அரசமைப்புசட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது. இதேபோன்ற மற்றொரு விவகாரத்தில், மணிப்பூரில் வனத் துறை அமைச்சா் ஷியாம் குமாரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் முடிவெடுக்க காலம் தாழ்த்தியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஷியாம் குமாா் அந்த மாநில சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை விதித்தது. மேலும், அவா் அமைச்சராக தொடரவும் தடை விதித்திருந்தது. ஆகவே, ஓ.பி.எஸ். விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாா். இந்த விவகாரத்தில் சட்டப் பேரவைத் தலைவருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.
 

TAGS
supreme court

Leave a Reply