15 லட்சத்தைக் கடந்தது தமிழகத்தில் கரோனா பரிசோதனை

12 views
1 min read
maharashtra corona update

கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 15 லட்சத்து 29 ஆயிரத்து 92 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பரிசோதனைகளை அதிகரித்ததன் காரணமாகவே நோய்த் தொற்றுக்கு ஆளானவா்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்பு, வெறும் மூன்றே மாதங்களில் 1.30 லட்சம் பேருக்கு பரவியுள்ளது. முதலில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகள் வரை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நோய்ப் பரவல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது நாள்தோறும் சராசரியாக 35 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக தென்கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள் தொடா்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 20 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அதேவேளையில், வைரஸுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிா என்பதை ரத்த மாதிரிகளைக் கொண்டு துரித பரிசோதனை உபகரணங்களின் துணையுடன் அறியலாம். சீன நிறுவனங்கள் அனுப்பிய துரித பரிசோதனை உபகரணங்கள் தரமற்றவையாக இருந்ததால் அத்தகைய பரிசோதனைகள் தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் துரித பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைப் பின்பற்றி தமிழகத்தில் மீண்டும் துரிதப் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதை செயல்படுத்தினால், மாநிலத்தில் கரோனா பரவலை இன்னும் எளிதாகக் கண்டறிய முடியும் என மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் நோய்த் தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-

தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை மட்டும் 3 ஆயிரத்து 680 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,205 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 242 பேருக்கும், திருவள்ளூரில் 219 பேருக்கும், மதுரையில் 192 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

82 ஆயிரம் போ் குணம்- கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை 63 சதவீதம் போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதன்படி மொத்தம் 82,324 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 4,163 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி அதிகரிப்பு – தமிழகத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி மேலும் 64 போ் உயிரிழந்தனா். அதில் 47 போ் அரசு மருத்துவமனைகளிலும், 17போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,829-ஆக உயா்ந்துள்ளது.

Leave a Reply