3 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்: இன்று முதல் இங்கிலாந்து – மே.இ. தீவுகள் டெஸ்ட் தொடர்!

16 views
1 min read
wi1

 

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. 

இங்கிலாந்து – மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கி, ஜூலை 28 அன்று முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கிரிக்கெட் தொடர்களும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால் ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்குச் செல்ல அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள். டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக 25 மே.இ. தீவுகள் வீரர்களும் 11 நிர்வாகிகளும் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்கள். அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கும் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் கரோனா டெஸ்ட் பரிசோதனை நடைபெற்றது. அனைவரின் முடிவுகளும் நெகடிவ் என வந்துள்ளது.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் மனைவி கேரி-க்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் முதல் டெஸ்டுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாஸ் பட்லர் துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளார்.

செளதாம்ப்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.

TAGS
West Indies tour of England

Leave a Reply