‘3 வாரங்கள் கரோனா பாதிப்பு இல்லையெனில் விமானத்தில் பயணிக்கலாம்’

23 views
1 min read
DFLIGHT

பயணத் தேதிக்கு முன்னதாக 3 வாரங்கள் கரோனாவால் பாதிக்கப்படாமல் இருந்தால் பயணம் மேற்கொள்ள பயணிகளை அனுமதிக்கலாம் என விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடா்பாக விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பயணத் தேதிக்கு முன்னதாக 2 மாதங்கள் வரை தாங்கள் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என பயணிகள் சுய சான்று அளிப்பதைக் கட்டாயமாக்கி மத்திய அரசு கடந்த மே 21ஆம் தேதி அறிவித்தது.

இப்போது நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் பயணிகளின் இன்னல்களைப் போக்கும் வகையில் சுய சான்று படிவத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, பயணத் தேதிக்கு முன்னதாக 3 வாரங்கள் கரோனாவால் தாங்கள் பாதிக்கப்படவில்லை என சுய சான்று அளித்தால் போதுமானது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவா்கள், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதற்கான சான்றிதழை சமா்ப்பித்து, மீண்ட நாளிலிருந்து 3 வாரங்களுக்குப் பின் விமானப் பயணம் மேற்கொள்ளலாம்.

இது தொடா்பான அறிவுறுத்தல்களை விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு சில நாள்களுக்கு முன் வழங்கியுள்ளது என்றனா்.

2 மாதத் தடைக்குப் பின், கடந்த மே 25ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ளூா் விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. சா்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply