31,258: ராகுல் டிராவிடின் சாதனையைப் பகிர்ந்த ஐசிசி!

19 views
1 min read
Rahul-Dravid

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் நிகழ்த்திய சாதனை பற்றி ட்வீட் செய்துள்ளது ஐசிசி அமைப்பு.

1996 முதல் 2012 வரை விளையாடிய ராகுல் டிராவிட், 164 டெஸ்டுகளில் பங்கேற்றுள்ளார். டிராவிடை விடவும் அதிக டெஸ்டுகளில் சச்சினும் காலிஸும் விளையாடியுள்ளார்கள். எனினும் இவ்விருவரை விடவும் டிராவிடே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

200 டெஸ்டுகளில் விளையாடிய சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29,437 பந்துகளையும் 166 டெஸ்டுகளில் விளையாடிய காலிஸ் 28,903 பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்விருவரை விடவும் குறைவான டெஸ்டுகளில் விளையாடிய டிராவிட், தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 31,258 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளார். 

இதுபற்றி ட்வீட் வெளியிட்டுள்ள ஐசிசி, 31,258 – டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு யாரை விடவும் அதிகப் பந்துகளை ஆடியவர் டிராவிட். வேறு எந்த பேட்ஸ்மேனும் 30,000 பந்துகளைக் கூட எதிர்கொண்டதில்லை. ஒவ்வொரு டெஸ்டிலும் 190.6 பந்துகளை அவர் விளையாடியுள்ளார் என்று கூறியுள்ளது.

TAGS
Rahul Dravid

Leave a Reply