4-ஆம் நாள் உணவு இடைவேளை: 35 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து பேட்டிங்

21 views
1 min read

கோப்புப்படம்

மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-வது நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

114 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-ஆம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட் பாட்னர்ஷிப்புக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் ரோரி பர்ன்ஸ் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, சிப்ளேவுடன் ஜோ டென்லி இணைந்தார்.

4-ஆம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. சிப்ளே 31 ரன்களுடனும், டென்லி 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி இன்னும் 35 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Leave a Reply