62.93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குணமடைவோர் விகிதம்: மத்திய அரசு

23 views
1 min read
The recovery rate has presently improved to 62.93 pc: Union Health Ministry

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 62.93 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 62.93 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றிய அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட பத்திரிகை செய்தி:

“கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 19,235 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,34,620 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் தற்போது 62.93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக சிகிச்சையில் உள்ளவர்களைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,42,362 கூடுதலாக உள்ளது. சிகிச்சை பெற்று வரும் 2,92,528 பேருக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,80,151 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,15,87,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 850 மற்றும் தனியார் ஆய்வகங்கள் 344 என நாட்டில் மொத்தம் 1,194 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.”

TAGS
coronavirus

Leave a Reply